பதக்கம் அள்ளிய மாணவியர்
மதுரை : மதுரையில் நடந்த மாவட்ட வாள் சண்டை போட்டியில் 15 தங்கம் உட்பட 33 பதக்கங்களை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியர் வென்று சாதனை படைத்துள்ளனர்.பசுமலை மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரியில் நடந்த இப்போட்டியில் மாணவிகள் 15 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் 9 மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளிக் குழு தலைவர் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை, செயலாளர் கிருஷ்ணன், தலைமையாசிரியை இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியை உமா பாராட்டினர்.