உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது

2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு 2026 ஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் திருப்பணிகளை முடிக்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி. இதன்படி 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.2ல் கோயிலின் வீரவசந்தரராயர் மண்டபம் தீ விபத்தில் முற்றிலும் சிதைந்தது. சீரமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும் நிர்வாக காரணங்களால் தாமதமாக பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து இதர திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது என்பதாலேயே 2021ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.இந்நிலையில் சட்டசபையில் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்பிறகு திருப்பணிகள் வேகம் எடுத்தன. 4 கோபுர பணிகள் ஸ்பான்சர்கள் மூலம் நடந்து வருகின்றன. இதைதவிர்த்து இதர திருப்பணிகளுக்கு ரூ.25 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே களரம்பள்ளி மலையடிவாரத்தில் கற்கள் வெட்டி எடுக்க ரூ.6.40 கோடியும், மண்டப வடிமைப்புக்கு ரூ.11.70 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கற்கள் மதுரை புறநகர் பகுதியில் கோயில் இடமான செங்குளத்தில் வடிவமைக்கப்பட்டு கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு பொருத்தி வருகின்றனர். முதல்வர் அறிவித்தபடி நடத்த வேண்டும் என்பதாலும், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானால் பணிகள் தடைபடும் என்பதாலும் 2026 ஜன.26ல் கும்பாபிஷேகம் நடத்துவதென அறநிலையத்துறை நாள் குறித்துள்ளது.அதற்குள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு, அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
நவ 27, 2024 12:53

பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த பணத்தில் அநிது ஆட்கள் ஆட்டையை போட்ட மீதியில் ஆலயத் திருப்பணிகள் நடக்கின்றன. உபயதாரர்களே செலவழித்து குடமுழுக்கு செய்வித்தாலும் அதில் ஸ்டிக்கர் ஒட்டி ஆஸ்திக வேடம் போடுவது திருட்டுக் கட்சி


Indian
நவ 27, 2024 12:49

மிக சிறப்பாக , நடைபெற வாழ்த்துக்கள் ..


Bhaskaran
நவ 27, 2024 12:19

எல்லாம் உபாயத்தாரர் செலவு அரக்கொள்ளை துறை டிக்கெட் விற்று வருமானம் பார்க்கும்


Natarajan Ramanathan
நவ 27, 2024 10:11

தாயே மீனாட்சி... கேடுகெட்ட இந்த திராவிட ஆட்சி ஒழிய நீதான் அருள் புரிய வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 08:01

சிறப்பு. ஸ்டாலின் அரசுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். 17 ஆண்டுகள் நடக்காத கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்து அனைவரும் அம்மன் அருள் பெற வேண்டும். இப்படிப்பட்ட அரசை, இந்த அறிவிப்பு வந்திருக்கும் இந்த நேரத்தில், பாஜக வின் எச் ராஜா வும், இந்துக்கள் முன்னணி காடேஸ்வரா வும், இந்து விரோத அரசு என்று சொல்லி நகைப்புக்குள்ளாக்கிக் கொண்டுவிட்டார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
நவ 27, 2024 06:51

தேர்தலுக்கு முன் முழுக்க முழுக்க தீயமுக விளம்பர மாடலில் நடக்கும். தமிழக, மதுரை மக்கள் வெறுப்பை கண்டிப்பாக சம்பாதிக்கும். பாஜகவிற்கு உத்தரப்பிரதேசம், அயோத்தியில் நடந்தது போல.


Balasubramanian
நவ 27, 2024 06:41

தாயே மீனாட்சி எல்லோரையும் காத்தருள்வாயாக! 2026 இல் நல்லாட்சி மலர அருள் புரி!


Kasimani Baskaran
நவ 27, 2024 05:45

இந்து அறநிலையத்துறைக்கு கோவில் நிர்வாகத்தில் எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஆனாலும் உள்ளே புகுந்து நாட்டாண்மை செய்து விடுகிறார்கள். கோவில் நிர்வாகம் நீதிமன்றம் செல்ல வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை