புரிந்துணர்வு ஒப்பந்தம்
மதுரை: காந்திய சிந்தனை, தேசிய தலைவர்களின் தியாகம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் கல்லுாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. கல்லுாரித் தலைவர் ஜவஹர் பாபு தலைமையில் முதல்வர் கோமதி, நிறுவன முதல்வர் தேவதாஸ் கையெழுத்திட்டனர். துணை முதல்வர் மஹிமா, மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன் உடன் இருந்தனர்.