உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமைச்சர் மூர்த்தி ஆய்வு

அமைச்சர் மூர்த்தி ஆய்வு

மதுரை: மதுரை கோச்சடை அருகில் வைகை ஆற்றிலிருந்து பிரியும் அவனியாபுரம் கால்வாய் துார்வாரும் பணியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: மாநகராட்சி, நீர்வளத்துறை இணைந்து துார்வாரும் பணியை மேற்கொள்கின்றன. கால்வாயில் குப்பை, பிளாஸ்டிக் கழிவு, மண் தேங்கியதால் மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டது. துார்வாரும், துாய்மைப்பணி நிறைவடைந்த பின் மழைநீர் சீராக செல்லும். மாநகராட்சியில் உள்ள அனைத்து கால்வாய் மற்றும் வடிகால்கள் துார்வாரப்படுவதால் கால்வாயில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார். கலெக்டர் பிரவீன் குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, நீர்வளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி