பந்தல்குடி கால்வாயில் ரூ.90 கோடியில் தடுப்புச்சுவர் அமைச்சர் நேரு தகவல்
மதுரை : மதுரையில் பந்தல்குடி கால்வாயின் இருபுறமும் ரூ.90 கோடியில் தடுப்புச் சுவர் கட்டப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லுார் கட்டபொம்மன் நகர், பந்தல்குடி வாய்க்கால், குலமங்கலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நேரு, மூர்த்தி, தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் பங்கேற்றனர்.நேரு கூறியது: நகரில் 18 குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது.மழை நீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பந்தல்குடி கால்வாயின் இருபுறமும் ரூ. 90 கோடியில் தடுப்புச் சுவர் கட்டப்படும். முதல்வர் அனுமதி பெற்று பணிகள் விரைவில் தொடக்கப்படும். அதிக மழைப் பொழிவு காரணமாகவே பாதிப்பை தவிர்க்க முடியவில்லை. 24 மணிநேரத்தில் துரித நடவடிக்கை எடுத்து இயல்பு நிலைக்கு மதுரையை கொண்டு வந்துள்ளோம் என்றனர்.