கொசுத் தொல்லை
பேரையூர்: டி.கல்லுப்பட்டி ஒன்றிய ஊராட்சிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதால் இப்பகுதியினர் அவதிப்படுகின்றனர். சில நாட்களாக சாரல் மழை பெய்வதால் தாழ்வான பகுதிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சில நாட்களாக குடியிருப்புகளில் இரவு மட்டும் இன்றி, பகல் நேரங்களிலும் கொசுக்கடி அதிகரித்து உள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.