உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரிந்துணர்வு ஒப்பந்த ஆலோசனை

புரிந்துணர்வு ஒப்பந்த ஆலோசனை

மதுரை : தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஜூலு நேட்டால் பல்கலையில், காந்தி லுாதுலி ஆவண காப்பகம் அங்குள்ள இந்திய மாணவர்களால் தொடங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் இந்திய வேர்களை கண்டறியும் ஆய்வில் இம்மையம் உதவுகிறது.இம்மையத்தின் நுாலகர் முனுசாமி மதுரை காந்தி மியூசியத்திற்கு மனைவியுடன் வந்தார். இவரது மூதாதையர் புதுச்சேரியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள். இதைத்தொட்ர்ந்து தென்னாப்பிரிக்க பல்கலை ஆவண காப்பகத்திற்கும், காந்தி மியூசியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட ஆலோசனை நடந்தது. இதில் மியூசிய செயலாளர் நந்தாராவ், காப்பாட்சியர் நடராஜன், ஆய்வு அலுவலர் தேவதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை