உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்

அலங்காநல்லுார் : அ.புதுப்பட்டி ராமகிருஷ்ணன் கோயில் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. பிப்.2ல் திருவிளக்கு பூஜை நடந்தது. அருளாளர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். 2ம் நாள் உச்சிக்கால பூஜையுடன் ராமகிருஷ்ணர், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தன. பக்தர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அலங்கரித்த சப்பரத்தில் சுவாமி முளைப்பாரி ஊர்வலத்துடன் வீதி உலா வந்தார். நேற்று சுவாமிக்கு மஞ்சள் நீராடல் விழா நடந்தது. பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்று கிராம ஊருணியில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை