உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய பாட்மின்டன் போட்டி

தேசிய பாட்மின்டன் போட்டி

மதுரை: தேசிய அளவிலான ஜூனியர் 19 வயதுக்குட்பட்டோர் ஆடவர், மகளிர் பிரிவு பாட்மின்டன் போட்டிகள் மதுரையில் நடக்கிறது. மதுரை மாவட்ட பாட்மின்டன் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு பாட்மின்டன் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்தன. ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தகுதிச்சுற்று போட்டிகளை துவக்கி வைத்தார். முதுநிலை மண்டல மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உடனிருந்தனர். தமிழ்நாடு பாட்மின்டன் சங்க செயலாளர் அருணாச்சலம், மதுரை சங்க மூத்த தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் கார்த்திக் அருண், ராஜ்குமார் டேவிட், ஒருங்கிணைப்புச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஒருங்கிணைத்தனர். தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, போக்குவரத்து நகர் பாவூஸ் பாட்மின்டன் அகாடமியில் இன்று (அக். 25) வரை தகுதிச்சுற்று போட்டியும், நாளை (அக்.26) முதல் 29 வரை பிரதான சுற்றுப் போட்டிகளும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை