உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தேசிய அரசியலமைப்பு தின கருத்தரங்கம்

 தேசிய அரசியலமைப்பு தின கருத்தரங்கம்

மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் தேசிய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு முதன்மை நுாலகர் தினேஷ்குமார் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சாமிதுரை பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முக்கியமானது முகப்புரை. நாட்டையே வழிநடத்தும் மாமந்திரம். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 9 மாதம் 18 நாட்கள் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மறைந்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆற்றிய பணி வரலாற்று சிறப்பு மிக்கது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 45 ஆயிரம் வார்த்தைகளால் எழுதப்பட்டது சட்டத் தொகுப்பு. நிர்வாகத்துறை, நீதித்துறையின் கடமைகள், பங்களிப்பு, மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்கள், பெண் பாதுகாப்பு குறித்தும் சொல்லப்பட்டுள்ளன. பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தை கற்றுத் தர வேண்டும் என்றார். ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ