தேசிய பெண் குழந்தைகள் தினம்
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார்,வாடிப்பட்டி பகுதி அரசு பள்ளிகளில் நகரி பிரிட்டானியா ஊட்டசத்து அறக்கட்டளை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.முடுவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தை திட்ட அலுவலர் ரஞ்சிதா துவக்கி வைத்தார். செமினிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மன்னாடிமங்கலம், கொழிஞ்சிப்பட்டி, அ.புதுப்பட்டி, பண்ணைகுடி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பல்வேறு வகை போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. களப்பணியாளர்கள் ஆனந்த், பானுப்ரியா, வாஞ்சிநாதன், ஜாகின், தேவி பிரியா போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.