உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தேசிய கராத்தே போட்டி

 தேசிய கராத்தே போட்டி

மதுரை: ஹிக்கோவாஷி கராத்தே அமைப்பு சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி ஈரோடு டெக்ஸ்வாலியில் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த 900 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மதுரை ஜி தொக்குக்காய் கராத்தே பள்ளி பயிற்சியாளர் கவுரிசங்கர் தலைமையில் பங்கேற்ற மாணவர்கள் 21 பதக்கங்களை வென்றனர். சப் ஜூனியர் கட்டா பிரிவில் ஹர்தேவ் ராஜன், பிரஜன், கவுஷிகா முதல் பரிசு பெற்றனர். ஸ்ரீ ஹரி 2ம் பரிசு, ஆராத்யா 3ம் பரிசு, கருப்பு பட்டை பிரிவில் ஹரிச்சரன் 2ம் பரிசு வென்றார். 8 வயது சண்டை பிரிவில் எஸ்.பிரஜன், யாழ்வேந்தன் 2ம் பரிசு, சித்தார்த் 3ம் பரிசு, 9 வயது சண்டை பிரிவில் பி.பிரஜன் 2ம் பரிசு, 10 வயது பிரிவில் ஹரிச்சரன், அபினேஷ் முதல் பரிசும், எப்ரன் 2ம் பரிசு வென்றனர். 11 வயது பிரிவில் ஹர்தேவ்ராஜன் 2ம் பரிசு, 13வயது பிரிவில் தக்ஷின் முதல் பரிசு, 14 வயது பிரிவில் சஞ்சய் 2ம் பரிசு, யோகேஷ், ஆதிதேவ் 3ம் பரிசு வென்றனர். 16 வயது பிரிவில் விக்னேஸ்வரன், கவிசந்தோஷ் 3ம் பரிசு, பெண்கள் பிரிவில் லக் ஷிதா முதல் பரிசு, சாதனா ஸ்ரீ 3ம் பரிசு வென்றனர். பள்ளி பொதுச் செயலாளர் முத்துராஜூ, ஹிக்கோவாஷி தலைவர் சம்பத்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !