உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய குங்பூ போட்டி

தேசிய குங்பூ போட்டி

மதுரை: தேசிய குங்பூ, கராத்தே, சிலம்பப் போட்டிகள் சேலம் ஜெயராணி கல்லுாரியில் நடந்தது. இதில் மதுரை குங்பூ டெம்பிள் மாணவர்கள் கலந்து கொண்டனர். குங்பூ சீனியர் நுன்சக் பிரிவில் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி அனிமேஷன் துறை மாணவர் ஶ்ரீநிஷ் வேல், சீனியர் வாள்வீச்சு பிரிவில் எச்.சி.எல்., நிறுவன சபீக் ரபி தங்கப்பதக்கம் வென்றனர். லாங் ஸ்டிக் பிரிவில் டி.வி.எஸ். பள்ளி பர்வேஸ், ரோஹன் தங்கப்பதக்கம், மகாத்மா குளோபல் பள்ளி ஆதித்யா வெள்ளி, நுன்சக் பிரிவில் நிக்கில் வெள்ளி, லாங் ஸ்டிக் பிரிவில் வல்லபா வித்யாலயா அமீனா மரியம் வெள்ளிப் பதக்கம் வென்றனர். மதுரை மாவட்ட குங்பூ சங்கத் தலைவர் சரவணன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை