உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய குங்பூ வூசூ போட்டி

தேசிய குங்பூ வூசூ போட்டி

மதுரை : உத்தரப்பிரதேசம் வாரணாசியில் தேசிய அளவிலான குங்பூ வூசூ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 17 மாநிலங்களைச் சேர்ந்த 600 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் மதுரையில் இருந்து 3 பேர் கலந்து கொண்டனர்.இதில் மதுரை குயின்மீரா சர்வதேச பள்ளியின் 5ம் வகுப்பு மாணவர் கிரிஷ் கார்த்திக் 14 வயதுக்குட்பட்டோர் 40 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 5ம் வகுப்பு மாணவி நேத்ரா வேலு ஒற்றை கம்பு பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். மதுரை ஹோலி ஏஞ்சல் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர் சிவசரண் 46 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்றவர்களை குங்பூ வூசூ தலைவர் பிரபாகரன், துணைத்தலைவர் பிரேம்குமார், குழுத்தலைவர் பழனிச்சாமி, செயலாளர் சந்திரா, துணைச்செயலாளர் தேவா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ