தேசிய வாசிப்பு தினம் கொண்டாட்டம்
மதுரை: மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாசிப்பு தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் ஜெயவீரபாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயஷீலா முன்னிலை வகித்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து புத்தகங்கள், நாளிதழ்களை வாசித்து புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். வாசிப்பு தொடர்பாக மாணவர்களுக்கு போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை துணை முதல்வர் ஸ்டெல்லா ஒருங்கிணைத்தார்.