தேசிய வூசூ போட்டி
மதுரை: தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ. ) சார்பில் ஜம்மு காஷ்மீரில் பள்ளிகளுக்கு இடையிலான 70வது தேசிய அளவிலான வூசூ போட்டி நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் பங்கேற்றனர். மதுரை ஹோலி பேமிலி பள்ளி பிளஸ் 1 மாணவர் சிவசரண், 48 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மாநில வூசூ சங்கச் செயலர் ஜான்சன், மாவட்டத்தலைவர் பழனிகுமார், பயிற்சியாளர்கள் தங்கபாண்டியன், பிரபாகரன் பாராட்டினர்.