உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரியில் வலைப்பின்னல் தினம்

கல்லுாரியில் வலைப்பின்னல் தினம்

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கணினி அறிவியல் துறை, சைபர் ஜாகுருதா கிளப் சார்பில் உலக வலைப் பின்னல் தினம் நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா துவக்கி வைத்தார். டீன் சிலம்பரசன், பேராசிரியர்கள் சுசித்ரா, சுதர்சன், ராஜ்குமார் ஒருங்கிணைத்தினர். சமூகப் பணித்துறை மாணவர்கள் பறை இசை நடனத்தை அரங்கேற்றினர். 155 மாணவர்கள் வலைப் பின்னல் எழுத்துக்கள் வடிவத்தில் நின்றனர். கல்லுாரி மாணவர் தலைவர்கள் பிரியதர்ஷினி, விஜயபாரதி, சத்தியதர்ஷினி, தாருஷா, சூர்யா, சத்தியன், சதீஷ்கண்ணா, வினோத்குமார், தனபாலன், மாதேஷ், அலாவுதீன் சுல்தான், ஆதித்ய பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ