உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் விழாவில் புதிய செயலி அறிமுகம்

நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் விழாவில் புதிய செயலி அறிமுகம்

மதுரை : மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க ஆண்டு விழா பேராசிரியர் சாலமன்பாப்பையா தலைமையில் நடந்தது. விழாவில் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவால் உருவாக்கப்பட்ட 'வீ பை' எனும் ஆன்லைன் வர்த்தக செயலியை அவர் துவக்கி வைத்தார். இதன்மூலம் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகளிடம் பழங்கள், காய்கறிகள் உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை நேரடியாக வாங்கலாம். தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் பேசியதாவது: கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிய காலம் மாறி, விலை குறைவு காரணமாக தற்போது ஆன்லைனில் வாங்குகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்துடன் போட்டியிட முடியாமல் கடை வணிகம் சரிந்து, ஆண்டு தோறும் வியாபாரிகள் குறைந்து வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2047ல் வணிகம் எப்படி இருக்க வேண்டும் என திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தினார். அடுத்த தலைமுறையினரை வணிகத் துறையில் ஈடுபடுத்த இதுபோன்ற செயலி அவசியம் என்றார். தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகஸ்தரை நியமிக்கும்போது ஒப்பந்தம் போட வேண்டும். விநியோகம் ரத்து செய்வதாக இருந்தால் 3 மாதங்களுக்கு முன் அவ்விநியோகஸ்தரிடம் எழுத்துப் பூர்வமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காளிமார்க் நிறுவன நிர்வாக இயக்குநர் ரமேஷ், நாகா நிறுவன இயக்குநர் சவுந்தர கண்ணன், நடராஜ் ஆயில் மில் நிர்வாக இயக்குநர் செந்தில்நாதன், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் சவுந்தரராஜன், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர்கள் நடராஜன், ராஜசேகரன், சோலைமலை குழும சி.இ.ஒ., ஆனந்த் பிச்சை உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ