கணவரோடு டூவீலரில் வந்த புது மணப்பெண் கடத்தல்
திருமங்கலம்: திருமங்கலம் சுவாமிமல்லம்பட்டி விஜயபிரகாஷ் 29. சென்னையில் சிவில் இன்ஜினியராக உள்ளார். இவருக்கும் கரிசல்காளான்பட்டி சுபலட்சுமிக்கும் 22, கடந்த மே 28ல் திருமணம் நடந்தது.நேற்று முன்தினம் விஜயபிரகாஷ் விடத்தகுளத்தில் உள்ள தங்கை வீட்டில் இருந்து மனைவியுடன் இரவு 9:00 மணிக்கு டூவீலரில் சுங்குராம்பட்டி அருகே வந்தபோது காரில் இருந்து இறங்கிய 30 வயதுள்ள மூன்று பேர் தடுத்து விஜயபிரகாஷை தாக்கி விட்டு சுபலட்சுமியை காரில் கடத்தினர். ஏ.எஸ்.பி., அன்சுல்நாகர், இன்ஸ்பெக்டர் சுப்பையா விசாரிக்கின்றனர்.