தினமலர் செய்தியால் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் சிதிலமடைந்ததால் 27 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ரூ. 4.90 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. நேற்று பஸ்ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். அமைச்சர் மூர்த்தி பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தார். கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, தாசில்தார் செந்தாமரை, பி.டி.ஓ.,க் கள் செல்ல பாண்டியன், சங்கர் கைலாசம் கலந்து கொண்டனர்.