மேலும் செய்திகள்
மதுரையில் 20ம் தேதி 'தனிஷ்க்' வைர கண்காட்சி
17-Dec-2024
மதுரை: மதுரையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜூவல்லரியின் வைரக்கண்காட்சியில் 20 சதவீத தள்ளுபடி விலையில் புதிய கலெக் ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அழகர்கோயில் மெயின் ரோட்டில் உள்ள கோர்ட்யார்ட் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இங்கு இதுவரை இல்லாத வகையில் பிரத்யேக திருமண வைர கண்காட்சி, விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் உயர் மதிப்புமிக்க வைரங்கள் பதித்த ஆபரணங்கள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு ஆபரணமும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் துாண்டும் வகையில், தரம், ஜொலிப்பு, கைவினைத்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.அவற்றை தனிஷ்க் நிறுவன பகுதி வணிக மேலாளர்கள் ராம்கவுதம், அருண்ஜோஷ்வா, பிராந்திய வணிகர்கள் பாலாஜி, லோகேஷ் பங்கேற்றனர். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தள்ளுபடி சலுகை எல்லா தனிஷ்க் ஷோரூம்களிலும் உண்டு.
17-Dec-2024