புதிய நிர்வாகிகள்அறிமுக விழா
மதுரை : மதுரை எம்.எல்.டபுள்யூ.ஏ., பள்ளியில் தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது.தாளாளர் நாகசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகளை மதுரை டி.இ.ஓ., அசோக்குமார், தேர்வுத்துறை உதவி இயக்குநர் பிரதீபா, மாநில செயலாளர் சூசை அந்தோணிராஜ், மாநில செயலாளர் முருகன் ஆகியோர் பாராட்டி பேசினர். பொருளாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் சிவராமன், மகளிரணி செயலாளர் கிருஷ்ணவேணி, இணை செயலாளர் இந்திராதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் முகமது பாரூக் நன்றி கூறினார்.