உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இரவு கடைகள்: கோரிக்கை மனு

இரவு கடைகள்: கோரிக்கை மனு

திருப்பரங்குன்றம்,; திருப்பரங்குன்றத்தில்ஹிந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளதாவது: கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பன்,முருக பக்தர்கள் ஏராளமானோர் திருப்பரங்குன்றம் வருவர். இங்கு நுாற்றுக்கும் அதிகமான திருமண மண்டபங்கள் இருப்பதால் பக்தர்கள் இரவில் தங்கி அதிகாலையில் சுவாமி தரிசனம் முடித்து புறப்படுவர். இரவு 10:50 மணிக்கு உணவகங்கள், டீக்கடைகளை அடைக்க போலீசார்கூறுகின்றனர். வெளியூர்களிலிருந்து இரவில் திருப்பரங்குன்றத்திற்கு வரும் பக்தர்கள் குழந்தைகளுக்கு பால் வாங்க கூட முடியாமல் அவதி அடைகின்றனர். மூன்று மாதங்களுக்கு இரவு 12:00 மணி வரை உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி மாவட்ட நிர்வாகம், போலீசாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை