உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

கொட்டாம்பட்டி: பூமங்களம்பட்டி சோலை ஆண்டவர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.இதில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்பட பல பகுதிகளில் இருந்தும் காளைகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வெள்ளிக் காசு, தென்னங்கன்று, அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகளை அடக்கியதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி