உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அபாயத்தில் அலுவலகம்

 அபாயத்தில் அலுவலகம்

அலங்காநல்லுார்: மதுரை வடக்கு தாலுகா பிள்ளையார் நத்தம் வி.ஏ.ஓ., அலுவலகம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் உட்பகுதி கூரையில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து உள்ளது. மழை காலங்களில் நீர் கசிவு ஏற்படுகிறது. ஆவணங்கள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. கட்டடம் கட்டி 20 ஆண்டுகளை கடந்து விட்டது. இதுவரை முறையாக பராமரிக்கவில்லை. கட்டட வெளிப்பகுதி சிலாப்பின் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளன. அலுவலக கட்டடத்தால் விபரீதம் ஏற்படுமோ என, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கட்டடத்தை பராமரிக்க அல்லது புதிதாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ