மேலும் செய்திகள்
திருமங்கலம் பகுதியில் வறண்டு போன கண்மாய்கள்
05-Jan-2025
திருமங்கலம்: திருமங்கலம் - விருதுநகர் ரோட்டில் கீழப்பள்ளிவாசல் உள்ளது. இதனருகே 10 மீட்டர் துாரத்தில் எலைட் மதுபான கடை திறக்கப்பட்டது. இக்கடையை திறக்கக் கூடாது என அந்த பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் வருவாய் அதிகாரிகளிடம் மனு கொடுத்தது. ஆனால் மதுக்கடையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று கீழப்பள்ளி வாசல் நிர்வாகிகள், திருமங்கலம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் உள்பட 400 க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். திருமங்கலம் தாசில்தார் மனேஷ்குமாரிடம் மனு வழங்கினர். அவர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
05-Jan-2025