மேலும் செய்திகள்
வேளாண் கூடுதல் இயக்குநர் ஆய்வு
16-Oct-2024
சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் வேளாண் கூடுதல் இயக்குனர் கண்ணையா, இணை இயக்குனர் சுப்புராஜ், துணை இயக்குனர்கள் தனலட்சுமி, மேரி ஜரின் ஆக்னிட்டா ஆகியோர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர். துணை வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருட்களின் இருப்பு விபரம், மண்ணாடிமங்கலத்தில் தரிசு நில தொகுப்பில் பழ மரக்கன்றுகள் நடவு செய்து தொகுப்பு விவசாயிகளின் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை சுத்திகரிப்பு, சான்று அட்டை பொருத்தும் பணி, விதை இருப்பு விபரங்களை கேட்டறிந்தனர். உதவி இயக்குனர் பாண்டி, அலுவலர்கள் சத்தியவாணி, டார்வின், துணை அலுவலர் பெருமாள், உதவி அலுவலர்கள் தங்கையா, பாண்டியராஜன் பங்கேற்றனர்.
16-Oct-2024