உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரி பஸ் மோதிய  விபத்தில் ஒருவர் பலி

கல்லுாரி பஸ் மோதிய  விபத்தில் ஒருவர் பலி

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜன்பட்டி பூண்டி விலக்கு அருகே தனியார் கல்லுாரி பஸ்மாணவர்களுடன் நேற்று முன்தினம் காலை சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது மோதி, அருகில் உள்ள கடைக்குள் புகுந்தது. இதில், ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேர் காயமடைந்ததில், கடையில் இருந்த சுந்தரராஜன்பட்டி கூலித்தொழிலாளி ஆறுமுகம் 50, கால்கள் துண்டிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார். அவருக்கு 11 வயதில் மகன் உள்ளார். சி.சி.டி.வி., காட்சியில் ஷேர் ஆட்டோ ரோட்டை கடக்க முயன்றதால் வேகமாக வந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரிந்தது. அப்பன்திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை