ஒரு போன் போதுமே..
குழாய் பதிக்கவில்லைமதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டில்பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் குழாய் பதித்த நிலையில் மதர்தெரசா பள்ளி ரோட்டில் ரேணுகா அம்மன் கோயில் தெருவில் மட்டும் எந்த பணியும் நடக்காமல் உள்ளது. - கே.ஆர்.குமார்மேலஅனுப்பானடிஅடிப்படை வசதி வேண்டும்விளாங்குடி பகுதி மீனாட்சி நகர் வருமானவரி முதல்தெருவில் ரோடு, பாதாளச்சாக்கடை, மழைநீர் வடிகால் வசதி இன்றி வசிக்கிறோம். குப்பையை எடுக்க ஆட்கள் வருவதில்லை. அருகில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்துள்ளது. - - பாண்டியராஜன், விளாங்குடி கால்வாய் துார்வாரப்படுமா மதுரை வல்லபாய் பகுதி குடியிருப்பை மெயின் ரோட்டில் இணைக்கும் பாலம் உள்ளது. பாலத்தின்அடியே வாய்க்கால் வழியே தல்லாகுளம் பெருமாள் கோயில் குளத்திற்கு நீர் திறந்துவிடப்படுகிறது. அதில் குப்பை, கழிவுநீர், தேங்குகிறது. 2 ஆண்டாக துார்வாரப்படவில்லை. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. -- நாகராஜன், வல்லபாய் ரோடுஆக்கிரமிப்பு கடைகள் மதுரை வார்டு எண் 47ல் சின்னக்கடை வீதி முழுவதும் பூ, பழம் கடைகள் வைத்துள்ளனர். வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அகற்ற வேண்டும். - அசோக், தெற்குவாசல்