உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே....

ஒரு போன் போதுமே....

குப்பையான ரோடுமதுரை மாடக்குளம் மெயின் ரோட்டில் தினமும் குப்பை கொட்டப்படுவதால், அந்த இடமே குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. சுகாதார அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -முருகேசன், மாடக்குளம்.தேங்கிய கழிவுநீர்மதுரை ஆனையூர் கருப்பசாமிநகர் பகுதியில், குப்பை, கழிவுகள் அடைத்து செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -சுந்தர், ஆனையூர்.வீட்டுக்குள் வரும் புழுக்கள்கள்ளிக்குடி ஒன்றியம் மேல உப்பிலிகுண்டு கிராமத்தில், கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. கழிவுநீரில் மிதக்கும் சாக்கடைப் புழுக்கள் வீட்டுக்குள் வருவதால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் உள்ளது. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- பாலமுருகன், மேலஉப்பிலிகுண்டு.தரப்படாத வீடுகள்மதுரை கப்பலுார் உச்சப்பட்டியில் குடிசைமாற்று வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட்டன. பணிகள் முடிந்து தயாரானபோதும் ஒதுக்கீடு செய்தவர்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- பாபு, உச்சப்பட்டி.சாக்கடை துர்நாற்றம்மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் ரூபி பள்ளி கடைசியில் உள்ள பாதாள சாக்கடையில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார ஆய்வாளர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலமுருகன், பழங்காநத்தம்.நிழலின்றி பயணிகள் அவதிமதுரை பழங்காநத்தம், பைக்காரா, அழகப்பா நகர் பகுதிகளில் ரோட்டை அகலப்படுத்த நிழற்குடைகளை எடுத்து விட்டனர். எனவே பொது மக்கள் வெயிலில் மிகவும் வாடி வதங்கி அவதிப்படுகின்றனர். உடனே நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- இளங்கோ, முத்துப்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !