உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே..!

ஒரு போன் போதுமே..!

* குப்பை ஆக்கிரமிப்பு மதுரை லட்சுமிபுரம் டி.வி.எஸ்., சுந்தரம் பள்ளி பின்புறம் குடியிருப்போர் அதிகளவில் குப்பை கொட்டுவதால் மாணவர்கள் பாதிப்படைகின்றனர். மழை நேரம் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்போரின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செந்தில், லட்சுமிபுரம். * நிழற்குடை வேண்டும் மதுரை விரகனுார் - ராமேஸ்வரம் ரிங் ரோடு பஸ் ஸ்டாப் அருகில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில், மழையால் பாதிக்கின்றனர். இரவு நேரம் தெருநாய் தொல்லையும் இருப்பதால் பாதுகாப்பு கருதி நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ரமேஷ், கீழவாசல். * அதிக வேகத்தடைகள் மதுரை சம்மட்டிபுரம் ரோட்டில் குறைந்த துாரத்திற்குள் அதிக வேகத்தடைகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். ரோடும் பயணிக்க இயலாத அளவுக்கு பழுதடைந்து உள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - தரணிதரன், எச்.எம்.எஸ்., காலனி. * மாசடையும் ஆறு மதுரை, கள்ளிக்குடி தாலுகா உலகாணி கிராமம் வழி பாயும் குண்டாறு குப்பையால் நிரம்பி வழிகிறது. இப்பகுதி மக்கள், துப்புரவு ஊழியர்கள் தொடர்ந்து குப்பையை கொட்டுவதால், அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜா, கள்ளிக்குடி. * தெருநாய் தொல்லை மதுரை முத்துப்பேட்டை மகாலட்சுமி நகரில் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. தெருவில் செல்வோரை துரத்திச்சென்று அச்சுறுத்துவதால் குழந்தைகள், வயதானோர் பாதிக்கப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செந்தில்குமார், முத்துப்பேட்டை. * வீணாகும் குடிநீர் மதுரை ஆத்திகுளம் பாத்திமா பள்ளி அருகில் உள்ள ரோட்டில் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - தினேஷ், ஆத்திகுளம். * குப்பை தொட்டிகள் இடையூறு மதுரை மீனாம்பாள்புரம், செல்லுார்-குலமங்கலம் இணைப்பு ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு ஆளாக நேரிடுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - அபுபக்கர், செல்லுார். * குடிநீர் வரவில்லை மதுரை அண்ணாநகர் 6வது வடக்கு குறுக்கு தெருவில் ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை. குழந்தைகள், வயதானோர் அதிகம் பாதிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - கார்த்திகேயன், அண்ணாநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை