ஒரு போன் போதுமே...
முறைகேடாக வசூல் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பறை முன்பு ஒருவர் அமர்ந்து, பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கிறார். இதுபோன்று முறைகேடாக வசூல் செய்வோர் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கந்தன், காளவாசல். தெருநாய்கள் தொல்லை மதுரை காந்தி பொட்டல் பகுதியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டமாக திரிகின்றன. அவ்வழியே செல்வோரை தாக்குவதால் குழந்தைகள், பெரியவர்கள் அதிகம் பாதிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாலா, காந்தி பொட்டல். சமூக விரோதிகள் நடமாட்டம் பழைய குயவர்பாளையம் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கஞ்சா, மதுவை பொது இடத்தில் வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் நடமாட பயப்படுகின்றனர். போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். - கணேஷ் பாண்டி, கீழவாசல். குப்பை எரிப்பு மதுரை டோக் நகர் மெயின் ரோடு நுழையும் இடத்தில், பிளாஸ்டிக் குப்பையை எரிக்கின்றனர். இதனால் குடியிருப்போர், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சுவாசிக்க முடியாமல் பாதிக்கின்றனர். பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. - யோகேஸ்வரன், டோக் நகர். அடிக்கடி விபத்துகள் மதுரை பாத்திமா கல்லுாரியில் இருந்து காளவாசல் செல்லும் ரோட்டில், குரு தியேட்டருக்கு எதிரே வெளிச்சம் குறைவாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.'ஹை மாஸ்' விளக்கு பொருத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - குணசேகரன், பெத்தானியாபுரம்.