உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பு

குன்றத்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு மழைநீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி, மூலவைகை, ஆண்டிப்பட்டி, பேரணை, சோழவந்தான், முள்ளிப்பள்ளம் ஆகிய வைகை ஆற்றுப்பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அதிக தண்ணீர் செல்கிறது.இதையடுத்து திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு நிலையூர் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ