உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு

விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு

மதுரை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படுகிறது.சர்வதேச விமான போக்குவரத்தால் (இடா - கேண்டா) நிறுவனம் மூலம் அளிக்கப்படும் பயிற்சியில், சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள், விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ் வழங்கி, வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இப்பயிற்சி முடிப்போருக்கு தனியார் விமான நிலையங்கள், சரக்கு ஏற்றுமதி நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், சொகுசு கப்பல், சுற்றுலா துறையில் வேலை பெறலாம். துவக்ககாலத்தில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் பெறலாம். இத்திட்டத்தில் முதற்கட்டமாக 55 பேருக்கு பயிற்சி வழங்கி, 46 பேர் முன்னணி நிறுவனங்கள், சேவை மையங்களில் பணியாற்றுகின்றனர்.இப்பயிற்சி பெற பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 23 நிரம்பியிருக்க வேண்டும். ஆறுமாதம் விடுதியில் தங்கிப் படிக்க வசதி, செலவின தொகை ரூ.95 ஆயிரம் தாட்கோ மூலம் வழங்கப்படும். இதில் சேர www.tahdco.comஇணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ