மேலும் செய்திகள்
மதுரை காஞ்சி மடத்தில் டிச.27 ல் ஆராதனை
25-Dec-2024
மதுரை: 'அனைத்துபிரச்னைகளுக்கும் ஆன்மிகத்தில்விடைதேடினால் கிடைக்கும்' என மதுரையில் நடந்த மஹா பெரியவர் ஆராதனை விழாவில்சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பேசினார்.மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்தில்நடந்த விழாவில்மஹா பெரியவர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தினமலர் ஆன்மிக மலர் எழுத்தாளர் பவித்ரா நந்தகுமார், எழுத்தாளர் திருமலை, வைதிக சமாஜம் ஆலோசகர் அருணாசல வாத்யார், ஆன்மிக சொற்பொழிவாளர்நாகை முகுந்தன், ஆன்மிக சேவகர் பாலா ராமச்சந்திரன் ஆகியோருக்கு உதயகுமார் விருது வழங்கினார்.அவர் பேசியதாவது:நிதி, உணவு உற்பத்தி, சேவை, அமைதி, சமரசம் எனஉலகில் எல்லாவற்றிலும் பற்றாக்குறை உள்ளது. எனினும் இவற்றை சமாளித்து விடலாம்.ஆனால் பிறரை பாராட்டுவதில் பற்றாக்குறை ஏற்பட்டால் மனித உறவில் இடைவெளி ஏற்படும்.ஆன்மிகம் இக்காலத்தில் அவசியமானதாகும்.அனைத்து ஜீவராசிகளிடத்திலும் உள்ள இரக்க குணத்தை மேலோங்கச் செய்து அரக்க குணத்தை துாங்க வைக்கும் தாலாட்டே ஆன்மிகம்.உணவுக்காகவோ, உயர்வுக்காகவோ, பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ இரக்க குணத்தை விட அரக்க குணத்தை மேலோங்கச் செய்பவனை இவ்வுலகம் தள்ளிவைக்கிறது.வாழ்வில் ஏற்படும் அனைத்துபிரச்னைகளுக்கும் ஆன்மிகத்தில்விடை தேடினால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.பூமியில் பிறப்பவர்கள் அனைவரும் சொக்கத் தங்கம். எனினும் இவ்வுலகில் வாழ, செய்கூலி சேதாரத்துடன் பக்குவப்பட வேண்டும். அவற்றை ஆன்மிகவாதிகள் செய்கின்றனர். மனதை பக்குவப்படுத்த விரத முறைகள் பயன்படுகின்றன. தன்னிடமுள்ளநல்ல குணங்களை எந்த சூழ்நிலையிலும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவரே சிறந்த ஆன்மிகவாதி என்றார்.அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்தார். 'கோதையும், கோவிந்தனும்' தலைப்பில் நாகை முகுந்தன் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
25-Dec-2024