மேலும் செய்திகள்
'மதுக்கடையை திறக்க விட மாட்டோம்'
20-Jun-2025
' டாஸ்மாக் ' கடைகளின் நேரத்தை குறைக்க திட்டம்!
29-May-2025
சோழவந்தான்: எரவார்பட்டியில் இருந்து காந்திநகர் செல்லும் வழியில் புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று எரவார்பட்டி, கவுல் பட்டி, காந்திநகர் தெப்பத்துப்பட்டி, அரசமரத்துப்பட்டி, பொம்மன்பட்டி மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், ''கல்யாணிபட்டியில் மதுக்கடை அமைக்க அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இங்கு திறக்க இருந்தனர். அருகே பள்ளிகள் உள்ளன. மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இப்பகுதியில் விபத்து அதிகரிக்கும்'' என்றனர்.கடையை திறக்க ஆதரவாகவும், எதிராகவும் இருதரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட, விக்கிரமங்கலம் போலீசார் சமரசம் செய்தனர். உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன் 'கடை திறக்கப்படாது' என்று உறுதியளித்தார்.
20-Jun-2025
29-May-2025