ஊருணி ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை ராஜேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை அருகே குலமங்கலத்தில் மூஞ்சி ஊருணி, நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கழிவு நீர் கலக்கிறது. அதை வெளியேற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர், மதுரை வடக்கு தாசில்தார், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: நீர்நிலையில் கழிவுநீரை கலக்கவிடாமல் தடுப்பு நடவடிக்கையை அதிகாரிகள் பார்த்துக் கொள்வர். ஆக்கிரமிப்புகள் இருந்தால், சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி அகற்ற வேண்டும். 4 மாதங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.