ஓவியபோட்டிகள்
மதுரை: மதுரை உலகத்தமிழ் சங்க வளாகத்தில் உள்ள அரசு கவின் கலைக்கல்லுாரியில் விக் ஷித் பாரத் 2047 என்ற பொருளில் ஓவியப்போட்டிகள் நடந்தன. தென்மண்டல கலாசார மைய நிர்வாக அதிகாரி ரங்கபாஷ்யம் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், தொழில்முறை வல்லுனர்கள் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. தொழில்முறை வல்லுனர்களில் முதல் பரிசாக ரூ.40 ஆயிரமும், கல்லுாரி மாணவர்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், பள்ளி மாணவர் பிரிவில் முதல் பரிசாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட்டன. வெற்றிபெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் நல்லசிவம் பரிசுகளை வழங்கினார்.