அணிவகுப்பு
அலங்காநல்லுார்: சட்டசபை தேர்தலையொட்டி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அலங்காநல்லுார், பாலமேட்டில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், போலீஸ் அணிவகுப்பு நடந்தது. சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வக்குமார், அந்தோணி செல்லத்துரை, உதவி கமாண்டோ அபிஜித் பாண்டே உட்பட 13 வீரர்கள், 24 போலீசார் பங்கேற்றனர்.