உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்டித்த ஆசிரியரை கண்டித்து பெற்றோர் போராட்டம்

கண்டித்த ஆசிரியரை கண்டித்து பெற்றோர் போராட்டம்

உசிலம்பட்டி; மதுரை மாவட்டம் பாப்பாபட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பிரம்படி கொடுத்த ஆசிரியரை கண்டித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பள்ளியில் 65 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தற்காலிக ஆசிரியராக நிறைமதி பணியாற்றி வருகிறார். பள்ளி அருகே உள்ள மின்னாம்பட்டியில் இருந்து மாணவர்கள் அரசு பஸ் தாமதமாக வருவதால் பள்ளிக்கு தாமதமாக வருகின்றனர். இதை சுட்டிக்காட்டியும், வகுப்பில் பாடங்களை கவனிப்பதில்லை என்றும் நிறைமதி நேற்று முன்தினம் பிரம்படி கொடுத்தார். மாணவர்களின் முதுகில் காயத்தை பார்த்த பெற்றோர், பள்ளிக்கு அவர்களை அனுப்ப மறுத்து ஊர் மந்தையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தப்பநாயக்கனுார் போலீசார், கிராம மக்கள், தலைமை ஆசிரியர் பரிமளா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காசிமாயன் பேச்சுவார்த்தை நடத்தினர். நிறைமதியை பணியில் இருந்து நீக்குவதாக கூறி மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ