உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உலக சமஸ்கிருத தினம்

உலக சமஸ்கிருத தினம்

மதுரை: ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமியின்போது உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது. மதுரை சமஸ்கிருத பாரதி கிளை சார்பில் சமஸ்கிருத தின விழா வஜ்ரா அப்பார்ட்மென்டில் நடந்தது. சமஸ்கிருத பாரதியின் தென் மாநில கல்வித்திட்ட தலைவர் கோபிநாத் சமஸ்கிருதம் கற்பதின் நோக்கம் குறித்து பேசினார். தென் மாநிலக்குழு உறுப்பினர் பத்மலக்ஷ்மி சமஸ்கிருதம் கற்பதின் அவசியத்தை கூறினார். பின் மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி ரகுநாத் பங்கேற்றார். மாவட்ட தலைவர் சியாமளா கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ