உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வூதியர்கள் தர்ணா

ஓய்வூதியர்கள் தர்ணா

மதுரை : மதுரையில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேர்முக பாண்டியன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் டேனியல் ராஜரத்தினம் முன்னிலை வகித்துப் பேசினார். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். வருவாய் கிராம ஊழியர்கள், ஓய்வு பெற்ற சிவில் சப்ளை பணியாளர்கள் ஓய்வூதியம் சார்ந்த நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், கம்யூட்டேஷன் பிடித்தம் செய்யும் ஆண்டை 12 ஆக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேசினர். மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பிச்சை, ராமகிருஷ்ணன், கல்லுாரிகளின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்க புரவலர் பார்த்தசாரதி, மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, அரசுஊழியர்கள் சங்க மாவட்டதலைவர் மணிகண்டன், வணிகவரித்துறை இணை செயலாளர் கல்யாணசுந்தரம், ஓய்வுவணிக வரி அலுவலர் சங்க மாநில செயலாளர் கோட்டைராஜூ உட்பட பலர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுனன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !