உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வரிவிதிப்பு முகாமில் குவிந்தன மனுக்கள்

வரிவிதிப்பு முகாமில் குவிந்தன மனுக்கள்

மதுரை : மதுரை மாநகராட்சியில் நடந்த அனைத்து வரிவிதிப்பு சிறப்பு முகாமின் முதல்நாளான நேற்று 200க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன.மாநகராட்சி சொத்து வரி நிர்ணயம் செய்வதில் 2022 முதல் 2024 வரை முறைகேடுகள் நடந்தது தொடர்பாக தற்போது விசாரணை நடக்கிறது. ஒவ்வொரு சேவைக்கும் கூடுதல் பணம் கொடுக்க வேண்டியிருந்ததால் அனைத்து வார்டுகளிலும் வரிவிதிப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் தேங்கிக் கிடந்தன.இதையடுத்து 100 வார்டுகளிலும் மனுக்கள் பெறும் வகையில் கமிஷனர் சித்ரா சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்தார். இதில் அளிக்கப்படும் மனுக்களுக்கு ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல் நாளில் சொத்துவரி விதிப்பு, பெயர் மாற்றம், காலி மனை வரிவிதிப்பு, புதிய பாதாளச் சாக்கடை இணைப்பு கேட்பது உட்பட 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. கமிஷனர் சித்ரா முகாமை பார்வையிட்டார். துணை கமிஷனர் ஜெய்னுலாவுதீன் உள்பட பலர் முகாமில் பங்கேற்றனர். இந்த முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி