உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறப்பு முகாமில் குவிந்த மனுக்கள்

சிறப்பு முகாமில் குவிந்த மனுக்கள்

அவனியாபுரம்; திருப்பரங்குன்றம் ஒன்றியம் வளையன்குளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மணி தலைமையில் நடந்தது. 1400 க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். அவர்களில் 800க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர். ஆதார், மருத்துவ காப்பீடு, பட்டா மாறுதல் கேட்டும் மக்கள் மனு கொடுத்தனர். * சோழவந்தானில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார். ஏற்கனவே முதற்கட்டமாக 1 முதல் 8 வது வார்டு மக்களின் கோரிக்கை மனுக்கள் ஜூலை 18 ல் நடந்த முகாமில் பெறப்பட்டன. தற்போது 2 ம் கட்டமாக 9 முதல் 18 வது வார்டு மக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 13 துறைகளை சார்ந்த 43 சேவைகள் வழங்கப்பட்டன. தாசில்தார்கள் ராமச்சந்திரன், பார்த்திபன், துணைத் தாசில்தார் செந்தில்குமார், பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வக்குமார், சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி, பேரூராட்சி ஊழியர்கள் கல்யாண சுந்தரம், ராமு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை