| ADDED : ஜன 02, 2024 05:58 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பா.பி., தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலரை மாற்று வழித்தடத்திற்கு கிளை மேலாளர் முகமது ராவுத்தர் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.அவர்களுக்கு மீண்டும் பழைய வழித்தடத்தை ஒதுக்க வேண்டும் என பா.பி., தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான கதிரவன் 'பேசுகிறார்' என அலைபேசியை கிளைமேலாளரிடம் தொழிற்சங்கத்தினர் கொடுத்தபோது வாங்க மறுத்தார்.இதை கண்டித்து நிர்வாகிகள் காசிமாயன், மணிகண்டன், பாஸ்கரபாண்டியன், ராஜா உள்ளிட்டோர் பணிமனை முன் 20 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர்.உசிலம்பட்டி - மதுரை ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. டி.எஸ்.பி., நல்லு தலைமையிலான போலீசார் சமரசம் செய்தனர்.