உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பி.எம். கிசான் நிதிவேண்டுமா: நவ.15க்குள் அடையாள எண் பெறணும்

பி.எம். கிசான் நிதிவேண்டுமா: நவ.15க்குள் அடையாள எண் பெறணும்

மதுரை: பிரதமரின் (பி.எம்) கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகை பெறுவதற்கு நவ. 15 க்குள் மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மதுரையில் உள்ள ஒரு லட்சத்து 25ஆயிரத்து 62 விவசாயிகளில் இதுவரை 85ஆயிரத்து 62 பேர் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். பி.எம். கிசான் ஊக்கத்தொகை பெறும் 57ஆயிரத்து 832 பேரில் 44 ஆயிரத்து 518 பேர் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் நவ. 15க்குள் கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுடன் இ-சேவை மையம் அல்லது வேளாண், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய் உள்ளிட்ட 24 துறைகளின் மானிய திட்டங்களை பெற தனித்துவ அடையாள எண் அவசியம். நவ. 15க்குள் அடையாள எண் பெறாவிட்டால் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்குவது நிறுத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !