வீடுகளில் புகும் விஷ
பேரையூர் : பேரையூர் அருகே பாப்பையாபுரம் கழிவு நீர் ஓடையில் பல ஆண்டுகளாக அகற்றப்படாத கழிவுகள் குப்பையாக தேங்கி நிற்கிறது.கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்க்கு வழிவகுக்கின்றன. இங்கு உலவும் விஷ ஜந்துகள் அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இங்குள்ள கழிவுநீர் ஓடையில் பல ஆண்டுகளாக குப்பை தேங்கி உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இல்லை.இதில் இருந்து வரும் துர்நாற்றத்தால் பலரும் பாதிக்கின்றனர். இதை சகித்துக்கொள்ளும் அவர்கள் கழிவுநீரில் இருந்து வெளிவரும் பூரான், தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வீட்டுக்குள் படையெடுப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்க டி.கல்லுப்பட்டி ஒன்றிய நிர்வாகம் ஓடையின் இரு புறமும் தடுப்புச் சுவர் அமைத்து கழிவுநீர் செல்ல வழிகாண வேண்டும்.