உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

திருமண மண்டபத்தில் திருடியவர் கைதுமதுரை: திருப்பரங்குன்றம் சுரேஷ் 54. மதுரை காமராஜர் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த திருமணத்தில் மனைவியுடன் பங்கேற்றார். மணமகன் அறையில் மனைவி கைப்பையில் இருந்த 3 பவுன் நகை, ரூ.1500 திருடுபோனது. தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். நேற்றுமுன்தினம் மீண்டும் அதே மண்டபத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்றபோது, மணமகள் அறையில் இருந்து சந்கேத்திற்குரிய வகையில் வந்த புது மகாளிப்பட்டி ரோடு வில்லியம்மிடம் 48, விசாரித்தபோது நகை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.விவசாயி, மாடு பலிபெருங்குடி: குசவபட்டி ஆண்டார் 70. இவர் வலையங்குளத்திலிருந்து திருமங்கலத்திற்கு இரட்டை மாட்டு வண்டியில் பெருங்குடி பகுதியில் சென்றபோது வாகனம் ஒன்று மோதியது. இதில் ஆண்டார் இறந்தார். ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாடு காணவில்லை. பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்ற 5 பேர் கைதுமேலுார்: அரசு இருபாலர் பள்ளி பின்புறம் எஸ்.ஐ., ஆனந்தஜோதி ரோந்து சென்றார். அங்கு மாணவர்களிடம் விற்பதற்காக கஞ்சா வைத்திருந்த நொண்டிக்கோவில்பட்டி அப்துல்லா 23, நாவினிபட்டி மகாலிங்கம் 20, ஆகாஷ் 22, மேலுார் கஸ்துாரிபாய் நகர் கோகுல் 22, முகமது ரியாஷ் 20, ஆகியோரை கைது செய்து 45 கிராம் கஞ்சா, ரூ.710 ஐ பறிமுதல் செய்தார்.விவசாயி கைதுசோழவந்தான்: கீழநாச்சிகுளம் விவசாயி ஹக்கீம் 58. இவர் அதே கிராமத்தை சேர்ந்த சற்று மனநலம் பாதித்த 25 வயது பெண்ணை கற்பழித்ததாக சோழவந்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை