போலீஸ் செய்திகள்
ரூ.2.95 லட்சம் கொள்ளை
மதுரை: ஒர்க் ஷாப் ரோட்டில் ஆட்டோ மொபைல் கடை நடத்துபவர் ராஜா 49. இவரது கடையில் பக்கவாட்டு கதவை உடைத்த மர்மநபர், கல்லா பெட்டியில் இருந்த ரூ.2.95 லட்சத்தை கொள்ளையடித்து சென்றார். திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர். மாணவர் பலி
கொட்டாம்பட்டி: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் கோவிந்த ராமு மகன் தரணீஸ் காசிலிங்கம் 20. மதுரை அண்ணா நகர் தனியார் கல்லுாரி விடுதியில் தங்கி முதலாமாண்டு பிசியோதெரபிஸ்ட் படித்தார். இவரது நண்பர் வண்டியூர் ராஜபாண்டி 20. நேற்று முன் தினம் கொட்டாம்பட்டி, சிலம்பக்கோன்பட்டியில் உள்ள ராஜபாண்டி உறவினர் விஜயலட்சுமி கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு சென்ற தரணீஸ் காசிலிங்கம் கிணற்றில் குளித்த போது மூழ்கி இறந்தார். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர். தொழிலாளி கொலை
நாகமலை: வடபழஞ்சி அருகேயுள்ள முத்துப்பட்டியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி கருப்பசாமி 27. நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அப்பகுதி அரசுப் பள்ளி அருகே கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் மது பாட்டில்கள் கிடந்தன.நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. நாகமலை போலீசார் விசாரிக்கின்றனர்.இறந்தவருக்குமனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.