உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ஜிம் மாஸ்டர் இறப்பு மதுரை: அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர் அன்புசெல்வம் 37. ஜிம் மாஸ்டரான இவர், பெற்றோரை பிரிந்து நண்பர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அக்.4ல் ரத்தம் உறைதல் ஏற்பட்டு பக்கவாத பாதிப்பால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அக்.11ல் இறந்தார். பெற்றோர் எங்குள்ளனர் எனத் தெரியாததால் உடலை ஒப்படைப்பதில் போலீசாருக்கு சிக்கல் நீடிக்கிறது. பெற்றோர் குறித்த விபரம் அறிந்தவர்கள் திருப்பாலை இன்ஸ்பெக்டர் அனுராதாவுக்கு 82488 28080 ல் தகவல் தெரிவிக்கலாம். --- * பெண்ணிடம் நகை பறித்த மூவர் கைது ------------- (மூவர் படங்கள் உண்டு) வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை மலையன் நகர் நவீன் சாம் சுந்தர், தனியார் பள்ளி இசை ஆசிரியர். இவரது மனைவி ஜோஸ்பின் நிஷா 28, சில நாட்களுக்கு முன் முதல் மாடியில் உள்ள வீட்டிற்கு மகனுடன் படிக்கட்டில் ஏறியபோது, மொட்டை மாடியில் இருந்து ஹெல்மெட் அணிந்து இறங்கிய நபர் நிஷா அணிந்திருந்த பத்தரை பவுன் தாலிச் செயினை பறித்தார். பின் டூவீலரில் நின்ற மற்றொரு நபருடன் தப்பிச் சென்றார். சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் விசாரித்த தனிப்படை போலீசார், நிலக்கோட்டை சிபி சக்கரவர்த்தி 29, பால்பாண்டி 45, மலையன் நகர் தனலட்சுமியை 42, கைது செய்தனர். இதில் சிபி சக்கரவர்த்திக்கும், தனலட்சுமிக்கும் பணம் வரவு செலவு உள்ளிட்டவற்றில் தொடர்பு உள்ளது. ஜோஸ்பின் நிஷாவின் பக்கத்து விட்டில் வசிக்கும் தனலட்சுமி நகை பறிக்க திட்டம் தீட்டி கொடுத்ததால் கைதாகியுள்ளார். -- * மின்சாரம் தாக்கி ஒருவர் பலி மேலுார்: கருத்தபுளியம்பட்டி அர்ஜுன் 21, கம்பி கட்டுபவர். நேற்று மதியம் கல்லம்பட்டியில் வீட்டு வேலையின் போது கம்பியை இழுக்கவே, கட்டர் மிஷின் ஒயரில் பட்டு அறுந்ததில் மின்சாரம் தாக்கி இறந்தார். மேலுார் போலீஸ் தினேஷ் குமார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை